நேபாளத்தின் கர்னாலி மாகாணத்தில் 18 பயணிகளை ஏற்றி சென்ற ஜீப் வண்டி 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் காயமடைந்துள்ளனர்.
காத்மண்டுவிலிருந்து மேற்கே சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரூஹும் மேற்கு மாவட்டத்தில் உள்ள பாபிகோட்டின் ஜெர்மாரெ பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இந்த விபத்து சம்பவித்துள்ளது.
அதிக வேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 15 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் தெரியவந்துள்ளது.

