செம்மணி – சித்துப்பாத்தி மயானத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த மனிதப் புதைகுழியின் அளவு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புதியதொரு இடத்தில் நேற்றுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கு முன்னர் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற பகுதிக்கு மேலதிகமாக, பிறிதொரு இடமும் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்று துறைசார் பேராசிரியர் ராஜ்சோமதேவ நீதிமன்றத்தின் கவனத்துக்கு ஏற்கனவே கொண்டு சென்றிருந்தார்.
அவரால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்கியிருந்தது. இவ்வாறான நிலையிலேயே, நேற்றைதினம் புதிய இடத்தில் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் மிகவும் எதிர்பார்ப்புக்கு உரியதாக மாறியுள்ளது.
அதேவேளை யாழ்ப்பாணம், செம்மணி மனி தப் புதைகுழியின் நேற்றைய அகழ்
வின் போது நான்கு புதிய என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்றுவரை மொத்தமாக 38 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.