13.1 C
Scarborough

​​​​​​​நகைச்சுவை நடிகர் மதன்பாப் மறைவுக்கு​ திரை​யுல​கினர் இரங்​கல்

Must read

பிரபல நடிகர் மதன்​பாப் (71) உடல் நலக்​குறை​வால் சென்​னை​யில் நேற்று மாலை கால​மா​னார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்​னையை சேர்ந்த மதன்​பாப்​பின் இயற்​பெயர் கிருஷ்ண​மூர்த்​தி. இசைக் குடும்​பத்​தைச் சேர்ந்த இவர் சினி​மாவுக்கு வரு​வதற்கு முன் இசைக் கலைஞ​ராக இருந்​தார். தனது சகோ​தரர் பத்​ம​நாபன் என்ற பாபுவுடன் இணைந்து ‘மதன் – பாபு’ என்ற பெயரில் இசைக்​குழுவை நடத்தி வந்​தார். இதனால் மதன் பாபு என்று அவரை அழைத்​தனர். அதுவே பின்​னர் மதன்​பாப் ஆனது.

‘நீங்​கள் கேட்​ட​வை’ படத்​தில் சிறிய வேடத்​தில் நடித்த அவர், ‘வானமே எல்​லை’ படம் மூலம் அறியபட்​டார். தொடர்ந்​து, தேவர் மகன், மகளிர் மட்​டும், பூவே உனக்​காக, கண்​ணுக்​குள் நில​வு, தெனாலி, பிரண்ட்​ஸ், சந்​திர​முகி, கிரி உட்பட 100-க்​கும் மேற்​பட்ட படங்​களில் நகைச்​சுவை மற்​றும் குணசித்​திர வேடங்​களில் நடித்​துள்​ளார். இந்​தி, மலை​யாளப் படங்​களி​லும் நடித்​திருக்​கிறார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article