மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் 17 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் 53 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று நடக்கிறது.
இந்த போட்டிக்கான நாணய சுழட்சியில் வென்ற ஆஸ்திரேலியா அணியின் தலைவர் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதல் பேட்டிங் செய்தது. இதில் 20 ஓவர் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதேவேளை 12 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கட்டுகளை இழந்து 105 ஓட்டங்களை பெற்றுள்ளது.