6.6 C
Scarborough

எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும் ராசிபலன் (08.11.2025)

Must read

மேஷம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் அதிக கவனம் செலுத்தி மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவர்.பணவரவு அதிகமாக இருக்கும். சுய தொழில் செய்யும் அழகு கலை நிபுணர்களுக்கு லாபம் கிடைக்கும்.பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். உடல் நலம் சிறப்பாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

ரிஷபம்

குடும்பத் தலைவிகளுக்கு தங்கள் நிர்வாக திறனை பார்த்து வியந்து தங்கள் கணவர் உங்களிடம் சரணடைவர். கணவர் வீட்டார் வீட்டிற்கு வந்து போவர். சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய புதிய திறனை வளர்த்துக் கொள்வார். மாணவர்களுக்கு கல்வியில் அதிகம் ஆர்வம் ஏற்பட்டு அதிக மதிப்பெண்களை பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மிதுனம்

உத்யோகஸ்தர்களுக்கு கணினி துறையில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். மனைவியின் தம்பி வகை உறவினர்களிடம் வாக்குவாதம் வந்து போகும். அவர்களை அனுசரிப்பது நல்லது. தம்பதிகள் ஒற்றுமை காப்பர். மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்று வருவார். பல் வலி வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

கடகம்

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடனுக்காக தங்கள் குழுவுடன் சேர்ந்து அரசு வங்கியை அணுகுவீர்கள். அக்கம் பக்க வீட்டார் உங்களை பாராட்டுவர். உடல் நலனில் ஒற்றைத் தலைவலி வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

சிம்மம்

வியாபாரிகளுக்கு தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. தம்பதிகளிடையே அன்பு பலப்படும். மாணவமணிகளுக்கு பகுதி நேரமாக விளையாட்டு துறையில் அக்கறை செலுத்துவர். உடல்நலம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கன்னி

தங்கள் பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பார். தம்பதியிடையே சிறு சிறு வாக்குவாதம் என்றாலும் உடனுக்குடன் சமாதானம் அடைவார். பணம் தாராளமாக வரும். நாத்தனார் தொல்லை இருக்காது.தங்கள் பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவர். உத்யோகஸ்தர்களுக்கு ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

துலாம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதனை சரிவர செய்து முடிப்பீர்கள். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செய்வீர்கள். தம்பதிகளிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் சற்று அலட்சிய போக்கை நிறுத்திவிட்டு நன்கு படிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

தனுசு

சொந்த தொழில் செய்பவர்களுக்கு தங்கள் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். குடும்பத் தலைவிகள் அத்தியாவசிய பொருள்களுக்கு மட்டும் செலவு செய்வது நல்லது. மாமனார் மாமியார் தங்களிடம் அன்பு பாராட்டுவர். மாணவர்கள் நன்கு படிப்பர் இடுப்பு கை கால் வலிகள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மகரம்

இன்றைய நாளில் தாங்கள் வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள். நெடுநாள் காத்திருந்த தங்களுக்கு எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும். வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் டிஜிட்டல் மார்கெட்டிங் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கும்பம்

பெண்களுக்கு பிடித்த விசயங்கள் நடக்கும் நாள். ஆண்கள் தங்கள் அலுவலகத்தில் அடுத்த நிலைக்கு பதவி உயர்வைப் பெறுவர். தொழில் ரகசியங்கள் வெளியில் கசியாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தந்தைவழி சொத்து கைக்கு வரும்.ஷேர் மூலமாக பணம் வரும். உடல் நலம் சீராகும். நீண்ட நாள் கனவு நினைவாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மீனம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அந்த வேலைகளை பகுதி பகுதியாக பிரித்துக் கொண்டு செய்து முடித்துவிடுவீர்கள். வியாபாரம் செழிக்கும். தம்பதிகளிடையே இருந்து வந்த பிணக்குகள் மறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் நலம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article