19.5 C
Scarborough

திருவிழாவில் குண்டுவெடிப்பு மூவர் பலி – 50 பேர் படுகாயம்!

Must read

தாய்லாந்தில் திருவிழா கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்து – தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் நகரில் வருடாந்திர திருவிழா நடைபெற்றது.

image
அப்போது விழாவில் கலந்து கொண்ட இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த சிலர் அந்த கூட்டத்தை நோக்கி சிலர் வெடிகுண்டு வீசயுள்ளனர்.
வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.

இச்சம்பவத்தில் 3 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளதுடள், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மீட்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக தாய்லாந்து போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article