உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான ஜானிக் சின்னர் லாரியஸ் விருதுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் லாரியஸ் அமைப்பானது லாரியஸ் விருதுக்கான போட்டியாளர்கள் பெயர்களை, சர்வதேச அளவில் விளையாட்டுத் துறை சார்ந்த ஊடகங்கள் பரிந்துரைக்கின்றன. பின்னர் இதன் 71 உறுப்பினர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில், விருது பெறும் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் சின்னருக்கு சுமார் ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற ஊக்க மருத்து சோதனையில் 3 மாதத்துக்கு (பெப்ரவரி 9 முதல் மே 4 வரை) டென்னிஸ் போட்டிகளில் இருந்து விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் விருதுக்கான போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
எனினும் உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சின்னர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை தவறவிடமாட்டர். ஏனெனில் அடுத்த பிரஞ்ச் ஓபன் மே.25ஆம் திகதியே ஆரம்பமாகிறது. கடந்தாண்டு நோவக் ஜோகோவிச் லாரியஸ் விருதுக்கான சிறந்த விளையாட்டு வீரர் விருதை வென்றார். இன்று திங்கட்கிழமை இந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.