அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதல் பொருளாதார ரிதியாகவும் அமெரிக்க நலன் என தெரிவித்தும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குடியேற்ற கொள்கை, வரி விதிப்பு என அவர் எடுக்கும் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அமெரிக்க அரசின் செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக உள்நாட்டிலும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அடுத்து. பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை எடுத்தார்.
டிரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவிலும் விலை வாசி உயர்ந்தது. டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது.
“இங்கு யாரும் மன்னர் இல்லை” என்ற வலியுறுத்தலுடன் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் 2500 க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப். “இந்த போராட்டங்கள் அர்த்தமற்றவை. அவர்கள் தன்னை ஒரு மன்னர் என குறிப்பிடுகிறார்கள்.நான் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டேன். அவர்களின் நலனுக்காகவே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

