ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிழக்கு குயின் ஸ்ட்ரீட்டில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் டொராண்டோ பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலை 6 மணியளவில் குயின் ஸ்ட்ரீட் ஈஸ்ட் , வீலர் அவென்யூ பகுதிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக சமூக ஊடக பதிவின் ஊடாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நபரொருவர் குறித்த தெருவில் கிடந்தாகவும் ,அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதால், குயின் ஸ்ட்ரீட் ஈஸ்டில் வீலர் அவென்யூ மூடப்பட்டுள்ளது.

