12.8 C
Scarborough

டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டி; முதல் முறை தகுதி சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

Must read

டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியின் உலக குரூப்! சுற்றில் இந்தியா-சுவிட்சர்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் சுவிட்சர்லாந்தின் பியல் நகரில் நடந்தது. இதில் முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் தக்ஷினேஸ்வர், சுமித் நாகல் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

2-வது நாளான நேற்று நடந்த இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி- ரித்விக் சவுத்ரி இணை 7-6 (7-3), 4-6, 5-7 என்ற செட் கணக்கில் ஜாகுப் பால்- டொமினிக் ஸ்டிரிக்கர் (சுவிட்சர்லாந்து) ஜோடியிடம் தோல்வியை தழுவியது.

இதைத் தொடர்ந்து நடந்த ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் சுமித் நாகல் 6-1 மற்றும் 6-3 என்ற நேர் செட்டில் ஹென்றி பெர்னெட்டை வீழ்த்தினார்.

இதனால் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் முறையாக பிரதான சுற்றை எட்டுவதற்கான தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article