இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் டெல்லி கப்பிட்டல்ஸுக்கெதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.
முஸ்தபிசூர் ரஹ்மானிடம் ஆரம்பத்திலேயே றோஹித் ஷர்மாவை இழந்தபோதும் றயான் றிக்கெல்டனின் 25 (18), வில் ஜக்ஸின் 21 (13), சூரியகுமார் யாதவ்வின் ஆட்டமிழக்காத 73 (43), நாமன் திர்ரின் ஆட்டமிழக்காத 24 (08) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை மும்பை பெற்றது.
பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4-0-22-1, விப்ராஜ் நிகம் 4-0-25-0, முஸ்தபிசூர் ரஹ்மான் 4-0-30-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.