தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் 1979-ம் ஆண்டு வெளியான ‘அகல் விளக்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் அவர் நடித்த அனைத்து படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தன.
இந்நிலையில் அவரது கேப்டன் படம் மீண்டும் திரையிடப்படவுள்ளது.
ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இது விஜயகாந்தின் 100-வது படமாகும்.
இப்படத்தின் மூலம் தான் விஜய்காந்திற்கு ‘கேப்டன்’ என்ற அடைமொழி கிடைத்தது.
இப்படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இதனை ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருக்கிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் 22ம் திகதி கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படம் 4 கே தரத்தில் டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளது.
முருகன் பிலிம் பேக்டரி மற்றும் ஸ்பேரோ சினிமாஸ் சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளார். தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் விரைவில் வெளியாக உள்ளது.