5.4 C
Scarborough

ஜப்பான் சென்றடைந்த இலங்கை ஜனாதிபதி;முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பு

Must read

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை ஜப்பான் கண்சாய் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

ஜனாதிபதி இன்று (27) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஜப்பானில் பல செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு ஜப்பானிய பேரரசரையும் சந்திக்கவுள்ளதுடன் ஜப்பான் பிரதமருடன் உச்சிமாநாட்டு சந்திப்புக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும் டோக்கியோவில் நடைபெறும் வணிக மன்றத்தில், ஜப்பானிய முன்னணி வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் உயர்மட்ட பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

மேலும் ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில், ‘எக்ஸ்போ 2025 ஒசாகா’ கண்காட்சியிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவதுபொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்ற ஜனாதிபதி அங்கிருந்து ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன் அவர் அங்கு 30ஆம் திகதி வரை தங்கியிருப்பார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article