18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் போட்டிகளின் முடிவில் பெங்களூரு, குஜராத், பஞ்சாப் அணிகள் ப்ளே ஓப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
லக்னோ, கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 62ஆவது லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிற்கான நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை பெற்று ராஜஸ்தான் அணிக்கு 189 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 17 ஓவர் நிறைவில் 04 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை பெற்று வெற்றியை சுவீகரித்தது.