சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் இடையே பரஸ்பரம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டு வர்த்தக போர் மூண்டது.
இந்த நிலையில் இரு நாடுகளும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அமெரிக்க தலைவர் டொனால்ட் ட்ரம்ப் மேலதிக வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக தெரிவித்திருந்தார்.
நவம்பர் ஒன்றாம் திகதி வரை குறித்த வரி நிறுத்தம் அமுலில் இருக்கின்ற சூழலில் தற்போது சீனா மீது 100 வித மேலதிக வரி விதிப்பை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் சீன பொருட்களுக்கு தற்போது 130 வீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மற்றும் சீன தலைவர்கள் எதிர்வரும் 30 ஆம்திகதி சந்திக்க இருந்த சூழ்நிலை ட்ரம்ப் இந்த வரியை விதித்துள்ளார்.
அத்துடன் சீன அதிபரை தான் சந்திக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தீன பொருட்கள் மீது மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க பங்கு சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

