சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், 2025 ஆம் ஆண்டு நடைபெறும் பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் டொக்டர் ஹரிணி அமரசூரியா, சீனாவின் பெய்ஜிங்கிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இன்று (12) சீனாவை சென்றடைந்த அவரை சீனாவின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக அமைச்சர் காவ் ஷுமின் அவரை வரவேற்றார்.
முதல் நாள் நிகழ்ச்சியின் போது, பிரதமர் சீனாவின் மிக பிரபல்யம் வாய்ந்த இடங்களான போர்பிட்டன் நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவரைப் பார்வையிட்டார்.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான அரண்மனை அருங்காட்சியகம் , ஏகாதிபத்திய கட்டிடக்கலை மற்றும் தேசிய அளவில் தொகுக்கப்பட்ட சேகரிப்புகளைக் காட்டுகிறது.
இதேநேரம் சீன பெருஞ்சுவர், சீனாவின் வரலாற்று புத்திசாலித்தனம் மற்றும் தொடர்ச்சியான பாதுகாப்பு முயற்சிகளின் அடையாளமாக நிற்கிறது.
எதிர்வரும் நாட்களில், பிரதமர், பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டம் 2025 இல் கலந்து கொள்வதோடு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங் உள்ளிட்டவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

