18.3 C
Scarborough

சீனா ஓபன் பெட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை முன்னேற்றம்

Must read

சீனாவின் சாங்சோவ் நகரில் சீனா ஓபன் பெட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜப்பானின் டோமோகா மியாசாகியுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து 21-15, 8-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதான சிந்து, கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த உன்னதி ஹூடாவுடன் மோதுகிறார். உன்னதி ஹூடா முதல் சுற்றில் 21-11, 21-16 என்ற செட் கணக்கில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரை வீழ்த்தினார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-9 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் கென்யா மிட்சுஹாஷி, ஹிரோகி ஒகாமுரா ஜோடியை தோற்கடித்தது.

கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சாட்விக், ஷிராக் ஜோடி தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்தோனேசியாவின் லியோ ரோலி கார்னாண்டோ, பகாஸ் மவுலானா ஜோடியை எதிர்கொள்கிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article