யுடியூபர்களான கிசன் தாஸ் ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளனர்.சாரங் தியாகு இயக்க, சித்து குமார் இதற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கு ஆரோமலே என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது இப்படம் தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரல் ஆனது.
படத்தின் டண்டணக்கா என தொடங்கும் பாடல் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து இந்த படத்தில் இருந்து இரண்டாவது பாடல் ‘எப்படி வந்தாயோ’ என்ற பாடல் வெளியாகி உள்ளது.
பிரபல இசை அமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான் இதை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடலை சின்மயி மற்றும் அரவிந்த் அரவிந்தாக்சன் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார்.

