பிராம்ப்டனில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் உயிருக்கு போராடிய சாரதி ஒருவர் உட்பட இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை பிற்பகல் கொலரைன் டிரைவ் சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணையில் வெள்ளை வணிக வேனை இயக்கிய சாரதியே காரணம் என தெரியவந்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் வந்தபோது, குறித்த வெள்ளை வணிக வேன் சந்தியில் பல வாகனங்களுடன் மோதியதைக் கண்டதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம் வயது ஆண் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மற்றொரு பயணியும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மேலும் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வேனின் சாரதி காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு குறிப்பிடத்தக்க காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.