சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக கிறிஸ்டி கொவென்ட்ரி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சிம்பாப்வே விளையாட்டு அமைச்சரும் இரண்டு முறை ஒலிம்பிக் நீச்சல் தங்கப் பதக்கம் வென்றவருமான இவர், இன்று (20) 97 ஐஓசி உறுப்பினர்களால் வாக்களிக்கப்பட்ட பின்னர் ஏழு வேட்பாளர்கள் பங்கேற்ற போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.