நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சம்பியன் பட்டம் வென்றார்.
கடந்த 01ஆம் திகதி ஆரம்பமான குறித்த தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 64 என அல்காரஸ் வென்றார். இரண்டாவது செட்டை டி மினார் 63 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அல்காரஸ் 62 என கைப்பற்றி சம்பியன் பட்டம் வென்றார்.