பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், நன்டிஸின் மைதானத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஏற்கெனவே சம்பியனாகத் தெரிவாகியுள்ள பரிஸ் ஸா ஜெர்மைன் சமப்படுத்தியது.
பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை வித்தின்ஹா பெற்றதோடு, நன்டிஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை டக்ளஸ் அகஸ்டோ பெற்றிருந்தார்.