15.4 C
Scarborough

கேன் வில்லியம்சனின் புதிய சாதனையுடன் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து

Must read

பாகிஸ்தானில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து- தென்னாபிரிக்கா அணிகள் மோதின.

இதில் முதலில் விளையாடிய தென்னாபிரிக்கா அணி 304 ஓட்டங்களை குவித்தது. பின்னர் 305 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் (133 ஓட்டங்களுடன் ஆட்டமிளக்கவில்லை), டேவன் கான்வே (97 ஓட்டங்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 48.4 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து 304 ஓட்டங்கள் எடுத்து போட்டியை சமநிலை செய்தபோது, கேன் வில்லியம்சன் 6,997 ஓட்டங்கள் எடுத்திருந்தார். ஒரு ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கேன் வில்லியம்சன் பவுண்டரி விளாசினர். இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதோடு, கேன் வில்லியம்சன் 7 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்.

167 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 159 இன்னிங்சில் 7 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 7 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 2 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக விராட் கோலி 159 இன்னிங்சில் 7 ஆயிரம் ஓட்டங்களை கடந்திருந்தார். தற்போது விராட் கோலியை பின்னுக்கு தள்ளி வில்லியம்சன் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

150 இன்னிங்சில் 7 ஆயிரம் ஓட்டங்களை கடந்து ஹாசிம் அம்லா முதல் இடத்தில் நீடிக்கிறார். ஏபி டி வில்லியர்ஸ் 166 இன்னிங்சில் கடந்து 4 ஆவது இடத்தில் உள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article