கென்யாவில் இங்கிலாந்து ராணுவம்,பயிற்சியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட அனர்த்தத்துக்கு இழப்பீடு வழங்க இங்கிலாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கென்யாவின் ரிப்ட் பள்ளத்தாக்கில் கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து ராணுவ பயிற்சியை நடத்திய போது ஏற்பட்ட தீ அருகில் உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவியதில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமாகின.
அத்துடன் பலருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க இங்கிலாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள வோல்டைகா வனப்பகுதி இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.