பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுகம் மதி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கும்கி 2’. ஷ்ரிதா ராவ், ஆன்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, நாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார்.
நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இதை பென் ஸ்டூடியோஸ், பென் மருதர் சினி என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் ஜெயந்திலால் காடா, தவல் காடா தயாரித்துள்ளனர்.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரபு சாலமன் கூறும்போது, “இப்படத்துக்காக நாங்கள் கடந்து வந்த பாதைகள் அதிகம். நெல்லையம்பதி என்ற இடத்தில் படப்பிடிப்புக்காகக் காட்டுக்குள் ஜீப்பில் செல்ல 4 முதல் 5 மணி நேரமாகும். மின்சாரம் இல்லாமல், மொபைல் நெட்வொர்க் இல்லாமல்தான் படப்பிடிப்பு நடத்தினோம். பழைய பிரிட்டிஷ் விருந்தினர் வீடு. கடுமையான குளிரில் மொத்தப் படக்குழுவினரும் சிரமப்பட்டார்கள். 2018-ல் தொடங்கி, 2019-ல் படத்தை முடித்துவிட்டு டிசம்பரில் போட்டுக் காட்டினோம்.
பிறகு கரோனா அனைத்தையும் புரட்டிப் போட்டுவிட்டது. தயாரிப்பாளருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது. இத்தனை ஆண்டுகாலம் நீண்ட பொறுமை காத்துள்ளார்” என்றார். படக்குழுவினருடன் இயக்குநர்கள் லிங்குசாமி, சரண், மடோன் அஸ்வின், நித்திலன், பிருந்தா சாரதி, ஜெகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
HinduTmail

