இங்கிலாந்து- இந்தியா இடையே 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
முதல் மூன்று போட்டிகள் முடிவில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்து- இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் வீரர்களை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்துள்ளனர்.
அப்போது இரண்டு அணி வீரர்களும் பரஸ்பரம் தங்களது டி-ஷர்ட்களை மாற்றி புகைப்படம் எடுத்துக் கொண்டனர் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.