கார்டினர் விரைவுச்சாலையின் சில பகுதிகள் திங்கள்கிழமை காலை நெரிசல் நேரம் வரை மூடப்படும் என்று டொராண்டோ நகரம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், உலகத் தொடரின் 2வது ஆட்டம் முடிந்தவுடன் பாதை மூடப்படும் என்று டொராண்டோ நகரம் தெரிவித்துள்ளது.
ஆறு பாதைகளையும் பாதுகாப்பாக மீண்டும் திறப்பதற்கும் பராமரிப்பு மற்றும் இறுதி தயாரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் ஸ்பேடினா அவென்யூவிலிருந்து நெடுஞ்சாலை 427 வரையிலான கார்டினர் விரைவுச்சாலையை முழுமையாக மூடுவது அவசியம் என்று டொராண்டோ நகரம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதேநேரம் இந்த வார இறுதியில் டொராண்டோவில் வானிலையைப் பொறுத்து, சில பயணிகள் வேலைக்குச் செல்வதால், அக்டோபர் 27 ஆம் திகதி காலை 7 மணியளவில் மூன்று மேற்கு நோக்கிய பாதைகளும் இரண்டு கிழக்கு நோக்கிய பாதைகளும் சாரதிகளுக்கு மீண்டும் திறக்கப்பட உள்ளது.

