6.2 C
Scarborough

கரூர் சம்பவம் குறித்த சர்ச்சை பதிவு: கயாடு லோஹர் விளக்கம்!

Must read

கரூர் சம்பவம் குறித்த சர்ச்சை பதிவு போலியானது என்று கயாடு லோஹர் விளக்கமளித்துள்ளார்.

”கரூர் சம்பவத்தில் எனது நண்பரை இழந்துவிட்டேன். அனைத்தும் தவெகவின் சுயநல அரசியலுக்காக. உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள் விஜய்?” என்று கயாடு லோஹர் பதிவிட்டதாக இணையத்தில் வைரலானது. இது தொடர்பான புகைப்படங்களும் பரவின.

இது தொடர்பாக கயாடு லோஹர் தனது எக்ஸ் தளத்தில், “எனது பெயரில் பரவும் எக்ஸ் தள கணக்கு போலியானது. எனக்கும் அதற்கு எந்தவொரு தொடர்பும் இல்லை. மேலும், அங்கு வெளியிடப்பட்ட அறிக்கைகளும் என்னுடையது அல்ல. கரூர் பேரணியில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். மேலும், அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருப்பினும், கரூரில் எனக்கு தனிப்பட்ட நண்பர்கள் யாரும் இல்லை என்பதையும், என் பெயரில் பரப்பப்படும் கதை தவறானது என்று தெளிவுப்படுத்த விரும்புகிறேன். தயவு செய்து இந்த தவறான தகவலை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம். மீண்டும் ஒருமுறை, துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு எனது பிரார்த்தனைகள்” என்று தெரிவித்துள்ளார்.

’டிராகன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கயாடு லோஹர். இதனால், அவரது பதிவு வைரலாகி சர்ச்சையானதால் இந்த விளக்கத்தினை உடனடியாக வெளியிட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article