கனடாவில் நிகழும் மரணங்களில், 20 பேரில் ஒருவர் கருணைக்கொலை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் மருத்துவ உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்ளும் சேவை (Euthanasia) தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளது.
ஆனால் அதிகரிப்பு வீதம் முந்தைய ஆண்டுகளை விட மந்தமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு கனடாவில் இந்த சேவை சட்டபூர்வமாக்கப்பட்ட பிறகு, இதுகுறித்து அரசாங்கம் ஐந்தாவது ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், 2023-ஆம் ஆண்டு, சுமார் 15,300 பேர் கருணைக்கொலை செய்யப்பட தேர்வு செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இது நாட்டின் மொத்த மரணங்களின் 4.7% ஆகும். என்பதோடு கிட்டத்தட்ட 20 பேரில் ஒருவர் இவ்வாறு மரணிக்கின்றனர்.
இந்த சேவையை தேர்ந்தெடுத்தவர்களின் 96% பேருக்கு இயல்பான மரணம் எதிர்பார்க்கப்பட்டது. மீதமுள்ள 4% பேர் நீண்டகாலம் நோயுற்ற நிலைமையில் இருக்கும் காரணத்தால் இதைத் தேர்வு செய்துள்ளனர்.
இச்சேவையை நாடுவோரின் சராசரி வயது 77 ஆக உள்ளதுடன், புற்றுநோயே இதற்கான அதிகபட்ச காரணமாகக் காணப்பட்டுகிறது.
இவற்றில் மூன்றில் ஒரு பங்கைவிட அதிகமான கருணைக்கொலைகள் கியூபெக்கில் நடைபெற்றுள்ளதாக அரசாங்கத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.