19.6 C
Scarborough

கனடாவில் மூன்று இந்தியர்கள் பலி – இந்தியா கவலை

Must read

கனடாவில் சமீபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் பலியான நிலையில், அவை பயங்கரமான துயர சம்பவங்கள் என இந்தியா விமர்சித்துள்ளது.

மேலும் அந்த சம்பவங்களின் பின்னணி குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளவேண்டும் என கனடா அரசை வலியுறுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களில் மூன்று இந்திய மாணவர்கள் உயிரிழக்கும் துரதிர்ஷ்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன, அந்த பயங்கரமான துயர சம்பவங்களால் நாங்கள் கவலை அடைந்துள்ளோம் என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஷ்வால் கூறியுள்ளார்.

அந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கனடாவிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் தூதரகங்கள் கனேடிய அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளதாகவும், அது தொடர்பான விடயங்களைக் கவனித்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தரப்பில் இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article