டொராண்டோ நகரின் கிழக்கு முனையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துளதோடு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓல்ட் ஃபின்ச் அவென்யூ மற்றும் மார்னிங்சைட் அவென்யூ பகுதிக்கு இரவு 11 மணிக்கு சற்று முன்பு கத்தியால் குத்தப்பட்டதாக வந்த முறைப்பாட்டின் பேரில் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்தில் கத்தியால் குத்தப்பட்ட நபர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதுடன் அவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லை என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் வருவதற்கு முன்பே சந்தேக நபர் அந்தப் பகுதியை விட்டு தப்பி ஓடிவிட்டதாகவும், சம்பவம் தொடரில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக தகவல் உள்ள எவரும் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

