6.6 C
Scarborough

கடைசி போட்டியில் மழை: ஆஸி.க்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி!

Must read

பிரிஸ்பன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி20 ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்ட நிலையில், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி 20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியின் அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. திலக் வர்மா நீக்கப்பட்டு ரிங்கு சிங் சேர்க்கப்பட்டார்.

பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. பென் டுவார்ஷுயிஸ் வீசிய 3-வது ஓவரில் ஷுப்மன் கில் 4 பவுண்டரிகள் அடித்தார். நேதன் எலிஸ் வீசிய அடுத்த ஓவரின் கடைசி பந்தை அபிஷேக் சர்மா மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இந்திய அணி 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருந்தபோது மின்னல் காரணமாக காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழையும் குறுக்கிட்டது.

அப்போது அபிஷேக் சர்மா 23, ஷுப்மன் கில் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக அபிஷேக் சர்மா 5 ரன்களில் இருந்த போது பென் டுவார்ஷுயிஸ் பந்தில் மிட் ஆஃப் திசையில் கொடுத்த எளிதான கேட்ச்சை கிளென் மேக்ஸ்வெல் தவறவிட்டார். இதன் பின்னர் அபிஷேக் சர்மா 11 ரன்களில் இருந்த போது நேதன் எலிஸ் பந்தில் ஃபைன் லெக் திசையில் கொடுத்த கேட்ச்சை பென் டுவார்ஷுயிஸ் தவறவிட்டார்.

தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இதையடுத்து போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது. கான்பராவில் நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக ரத்தாகியிருந்தது. மெல்பர்னில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ஹோபர்ட்டில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும், கோல்டு கோஸ்டில் நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் 48 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

hindutamil

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article