ஐ.சி.சி மகளிர் ஒருநாள் போட்டியின் 2024 ஆம் ஆண்டிற்கான வீராங்கனையாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளாக பரிந்துரைக்கப்பட்ட லாரா வோல்வார்ட், டோமி பியூமண்ட் மற்றும் ஹேலி மேத்யூஸ் ஆகியோரை அவர் தோற்கடித்திருக்கின்றார்.
மேலும் , அவர் 2024 முழுவதும் 13 இன்னிங்ஸ்களில் 57.86 சராசரியுடன் 747 ஓட்டங்களை எடுத்துள்ளார்.