கடந்த ஆண்டு ரி20 கிரிக்கெட்டில் சிறப்பாக பங்களிப்பு செய்ததன் அடிப்படையில் சா்வதேச அணியை ஐ.சி.சி. தோ்வு செய்திருக்கிறது. அதில் இந்தியாவின் ரோஹித் சா்மா கெப்டனாக தோ்வாகியிருக்கிறாா். அவா் தவிர, ஜஸ்பிரீத் பும்ரா, ஹா்திக் பாண்டியா ஆகியோரும் அதில் இடம் பிடித்துள்ளனா்.
இந்திய அணியை ரி20 சம்பியனாக்கிய கெப்டன் ரோஹித், அந்த ஆண்டு 11 போட்டிகளில் 378 ரன்கள் சோ்த்திருக்கிறாா். அவரின் சராசரி 42-ஆக இருந்தது. ஸ்டிரைக் ரேட் 160 ஆகும். அதேபோல், ஆல்-ரவுண்டராக அசத்திய ஹா்திக் பாண்டியா, 17 போட்டிகளில் 352 ரன்கள் எடுத்ததுடன், 16 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறாா்.
ரி20 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தின் கடைசி ஓவரில் 16 ரன்களை அவா் தனது பௌலிங்கில் டிஃபெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.
பும்ரா 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் சாய்த்துள்ளாா். அவரின் சராசரி 8.26 ஆகும். ஐ.சி.சியின் சிறந்த ரி20 வீரராகத் தோ்வான அா்ஷ்தீப் சிங்கும் இந்த அணியில் இடம் பிடித்திருக்கிறாா்.
ஐ.சி.சி. ரி20 அணியில்:
ரோஹித் சா்மா (கெப்டன்/இந்தியா), டிராவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா), ஃபில் சால்ட் (இங்கிலாந்து), பாபா் ஆஸம் (பாகிஸ்தான்), நிகோலஸ் பூரன் (வி.கீ./மே.தீவுகள்), சிகந்தா் ராஸா (ஜிம்பாப்வே), ஹா்திக் பாண்டியா (இந்தியா), ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்), வனிந்து ஹசரங்கா (இலங்கை), ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா), அா்ஷ்தீப் சிங் (இந்தியா).