ஐபிஎல் தொடரின் 36-வது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதலில் விளையாடிய லக்னோ 180 ரன்கள் அடித்தது.
பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடி வருகிறது. வைபவ் சூர்யவன்ஷி இம்பேக்ட் பிளேயர் அடிப்படையில் தொடக்க வீரராக களம் இறங்கினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அத்துடன் தான் சந்தித்த முதல் பந்தை சிக்சருக்கு விளாசினார்.
* சூர்யவன்ஷி 14 வயது 23 நாட்களில் அறிமுகம் ஆகியுள்ளார்.
* பிரியாஸ் ராய் பர்மன் 16 வயது 157 நாட்களில் அறிமுகம் ஆனார்.
* முஜீப் உர் ரஹ்மான் 17 வயது 11 நாட்களில் அறிமுகம் ஆனார்.
* ரியான் பராக் 17 வயது 152 நாட்களில் அறிமுகம் ஆனார்.
* பிரதீப் சங்வான் 17 வயது 179 நாட்களில் அறிமுகம் ஆனார்.

