ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை – ஐதராபாத் அணிகள் மோதின. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா களமிறங்கினர். அதில் ஹெட் 0, இஷான் கிஷன் 1, அபிஷேக் சர்மா 8, நிதிஷ் குமார் 2, அன்கிட் வர்மா 12 என அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களுடன் வெளியேறினர்.
இதனால் 35 ஓட்டங்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி திணறியது. இதனையடுத்து கிளாசன் மற்றும் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அபினவ் மனோகர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடிய கிளாசன் 71 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அபினவ் 43 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இதனால் 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 150 ஓட்டங்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 151 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி நர்ணயிக்கப்பட்ட 15.4 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் 26 பந்துகள் மீதமிருக்க 146 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.