மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.
இந்த போட்டியில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-4) என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதி சுற்றில் ஜோகோவிச், டிமித்ரோவ் உடன் மோதுகிறார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் 1000 டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய வயதான வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றிருக்கிறார்.
தற்போது ஜோகோவிச் வயது 37 ஆண்டுகள் 10 மாதங்கள் ஆகிறது. முன்னதாக ரோஜர் ஃபெடரர் தனது 37 வயது ஏழு மாதங்கள் இருக்கும் போது இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி தொடர்களின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்ற வயதான வீரர் என்ற சாதனையாக இருந்தது.