இலங்கை கடற்படை, கடலோர காவல்படை ஆகியனஇணைந்து இன்று (28) அதிகாலை யாழ்ப்பாணம், டெல்ஃப்ட் தீவுக்கு அருகிலுள்ள இலங்கைக் கடல் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன்போது உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக 12 இந்திய மீனவர்களை சுற்றி வளைத்ததோடு ஒரு இந்திய மீன்பிடிக் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் நாட்டின் கடல் எல்லையை மீறி பயணம் மேற்கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கவும், உள்ளூர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை மற்றும் கடலோர காவல்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகும், அதில் இருந்த 12 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண மிலாடி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

