5.1 C
Scarborough

என் மனம் படும் வேதனையை எப்படி சொல்வதென தெரியவில்லை;விஜய்

Must read

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

கற்பனைக்கும் எட்டாத கரூரில் நடந்த துயரை நினைத்து இதயமும் மனதும் கனத்து போய் இருக்கும் சூழல்.

நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெரும் துயரில் என் மனம் படுகிற வேதனையை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை.

கண்களும் மனமும் கலங்கி தவிக்கின்றேன் நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன பாசமும் தேசமும் காட்டும் இது உறவுகளை நினைக்கும் போது அது இதயத்தை மேலும் மேலும் நழுவ செய்கிறது.

என் சொந்தங்களே நம் உயிரான உறவுகளை இழந்து தவிர்க்கும் உங்களுக்கு சொல்லொணா துயரங்களுடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதே வேளையில் உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. உங்கள் குடும்பத்தில் ஒருவனாக உறவினை இழந்து தவிக்கும் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 இலட் ரூபாவும்,காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு 2 இலட்ச ரூபாவும் அளிக்க விரும்புகிறேன். காயமடைந்த அனைவரும் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

இறைவன் அருளாலே அனைத்திலும் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம் என தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article