யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் ஒன்று, மோட்டார் சைக்கிளில் மோதியதில், அதில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் அதனை செலுத்திய இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில், மிருசுவிலை சேர்ந்த நந்தகுமார் ஜெயலக்சுமி (வயது 46) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் செலுத்திய கனகலிங்கம் செந்தூரன் (வயது 22) என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தினை ஏற்படுத்திய உழவு இயந்திரம் தப்பி சென்றுள்ள நிலையில், கொடிகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொடிகாமம் , கச்சாய் பகுதியில் இருந்து சட்டவிரோதமான மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் , வேக கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் குறித்த இயந்திர சாரதி தப்பி சென்றுள்ளதாக தெரிய வந்ததை அடுத்து உழவு இயந்திரத்தை கைப்பற்றவும் அதன் சாரதியை கைது செய்யவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

