15.4 C
Scarborough

உங்களின் ஆதரவின்றி வென்றிருக்க முடியாது – நடிகர் அஜித்

Must read

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாகவும் கார் பந்தய வீரராகவும் அஜித்குமார் வலம் வருகிறார். சமீபத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி கார் பந்தயத்தில் அஜித் கவனம் செலுத்தி வந்தார். அதன் காரணமாக பெல்ஜியமில் நடைபெற்ற போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இது குறித்து நடிகர் அஜித் கூறியதாவது:-

கார் பந்தய பயிற்சி முதல் வெற்றி வரை உங்களின் ஆதரவின்றி ஜிடி4 ரேஸில் வென்றிருக்க முடியாது. இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி என அஜித் கூறினார்.

ஏற்கனவே டுபாயில் நடைபெற்ற போட்டியிலும் இத்தாலியில் நடைபெற்ற போட்டியிலும் 3ஆவது இடத்தை அஜித்குமார் கார் ரேஸிங் அணி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article