6.2 C
Scarborough

இலங்கை பொலிஸ் இந்த ஆண்டில் 51 இலட்சம் தனி நபர்கள் மீது விசாரணை

Must read

இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 51 லட்சம் தனி நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 104 000 பேர் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 4630 சந்தேகங்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதை பொருள் மற்றும் பாதாள உலகம் குழுக்களை கைது செய்வது மாத்திரமின்றி வீதி விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 46 ஆயிரத்து 909 சாரதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கவன குறைவாக வாகனம் செலுத்தியமை தொடர்பில் 3404 வழக்குகளை தொடருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் சந்தேக நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 87 திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் இனம் காணப்பட்டு அவற்றுடன் தொடர்புடைய 38 துப்பாக்கிதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய 328 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் 1721 துப்பாக்கிகள் இதுவரையில் கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article