இஸ்ரேலுக்கு சென்றிருந்த 17 இலங்கை நாட்டவர்கள், அவர்களது வேலை ஒப்பந்தங்களை மீறிய நிலையில், நாடு கடத்தப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
நாடு கடத்தப்படுபவர்கள், விவசாய வேலைகளுக்கான விசாக்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளனர்.
எனினும் அவர்கள் நியமிக்கப்பட்ட பணியிடங்களை விட்டு வெளியேறி, வெதுப்பகங்களில் பணிபுரிந்துள்ளனர்.
குறிப்பிடப்படாத வேலை வகைக்கு மாறியதால் இஸ்ரேலிய அதிகாரிகள் அவர்ளை தடுத்து வைத்திருந்ததுடன், நாடு கடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் திருட்டு குற்றச்சாட்டின் பேரிலும் மற்றொரு இலங்கையர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, இவ்வாறான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கும் இரு நாடுகளுக்குமிடையில் நல்லுறவைப் பேணுவதற்கும் தொழிலாளர்கள் தமது ஒப்பந்தக் கடமைகளை கடைப்பிடிக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.