17.6 C
Scarborough

இறக்கும் முன் தன் வீட்டை பிரபல நடிகருக்கு எழுதி வைத்த ஹுசைனி!

Must read

நடிகரும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் உயிரிழந்தார்.

பத்ரி படத்தில் விஜய்க்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளராக நடித்தது அவர் தான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது ஹுசைனி அளித்த பேட்டியில் ‘நான் இன்னும் சில தினங்களில் இறந்துவிடுவேன், நடிகர் விஜய் என்னை வந்து பார்க்க வேண்டும், அவரிடம் பேச வேண்டும்’ எனவும் கூறி இருந்தார்.

ஆனால் விஜய் அவரை பார்க்க வரவே இல்லை. ஹுசைனியின் கடைசி ஆசை விஜய் நிறைவேற்றவில்லை என விஜய் மீதும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

வீட்டை எழுதி வைத்த ஹுசைனி

இந்நிலையில் ஹுசைனி தனது வீட்டை தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு எழுதி வைத்து இருக்கிறாராம். பவன் கல்யாண் ஹுசைனியிடம் பயிற்சி பெற்றவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீட்டை தனது நினைவிடமாக அவர் மாற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article