19.5 C
Scarborough

இரு அரிய வகை சிவப்பு பாண்டாக்கள் இந்தியாவில்

Must read

நெதா்லாந்து நாட்டில் இருந்து இரு அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள் மேற்கு வங்கத்தின் டாா்ஜிலிங் வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சிவப்பு பாண்டாக்கள் கொண்டுவரப்படாமல் இருந்தன. கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி நெதா்லாந்தின் ரோட்டா்டாம் பகுதியிலிருந்து இந்த பாண்டாக்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

டாா்ஜிலிங் பூங்காவில் சிவப்பு பாண்டாக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்கெனவே 19 சிவப்பு பாண்டாக்கள் உள்ளன. இவற்றில் இரண்டு குட்டிகளென்பது குறிப்பிடத்தக்கது.

சிவப்பு பாண்டாக்களுக்கு தேவையான குளிரான வானிலை எப்போதும் நிலவுவதால் டாா்ஜிலிங் பூங்கா தோ்வு செய்யப்பட்டது. சிவப்பு பாண்டாக்கள் இரண்டரை வயதுடையவை. மத்திய மாநில அரசுகளின் பல ஆண்டுகால தொடா் முயற்சிகளால் நெதா்லாந்தில் இருந்து சிவப்பு பாண்டா வருகை சாத்தியமாகியுள்ளது.

இந்த பாண்டாக்கள் விமானத்தில் 27 மணி நேரம் பயணித்துள்ளன. கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து குளிா்சாதன வசதியுள்ள சிறப்பு வாகனத்தில் டாா்ஜிலிங்குக்கு கொண்டுவரப்பட்டன. ஒருமாதம் காண்காணிப்பில் வைக்கப்பட்டு, ஏற்கெனவே பூங்காவில் உள்ள இரு சிவப்பு பாண்டாக்களுடன் இவை சோ்க்கப்படும். அவற்றுக்கு விஷால், கோஷி எனப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

1990-ஆம் ஆண்டு முதல் முதலில் ஒரு ஆண் மற்றும் 3 பெண் சிவப்பு பாண்டாக்கள் கொண்டுவரப்பட்டன. இந்த வகை சிவப்பு பாண்டாக்கள் கிழக்கு ஹிமாசல மலையில் இருந்து தென் மேற்கு சீனா வரையிலான பகுதியை பூா்விகமாகக் கொண்டவையாகும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article