இங்கிலாந்து அணியின் தலைவர் ஹாரி புரூக் நிலைத்து நின்று விளையாடிய போதும் மறுபுறம் அடுத்தடுத்து விக்கட்டுகள் வீழ்த்தன.
இதனால் இங்கிலாந்து அணி 35 .2 ஓவரில் அனைத்து விக்கட்டையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இங்கிலாந்து அணி தலைவர் ஹாரி 135 ஓட்டங்களை எடுத்தார் இதனை அடுத்து 224 என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.
அந்த அணி 36.4 ஓவரில் ஆறு விக்கெட்டை மாத்திரம் இழந்து 224 ஓட்டங்கள் எடுத்தது நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 78 ஓட்டங்களை எடுத்தார்.
இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெற உள்ளது.

