இந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியில் அதிக அரை சதங்கள் அடித்து ஜோ ரூட் சாதனைப்படைத்துள்ளார்.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 49.5 ஓவரில் 304 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ஓட்டங்களும், பென் டக்கெட் 65 ஓட்டங்களும் அடித்தனர். இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் அடித்த அரைசதம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 56ஆவது அரை சதமாகப் பதிவானது.
இதன்மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார்.
இயன் மோர்கன் 55 அரை சதம் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவரை முந்தி ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார்.
அதிகபட்ச அரை சதம் கடந்தோர் பட்டியல்
ஜோ ரூட் – 56
இயோன் மோர்கன் – 55
இயன் பெல் – 39
பட்லர் – 38
கெவின் பீட்டர்சன் – 34