4.3 C
Scarborough

ஆப்கான் – பாகிஸ்தான் மோதல்; வெற்றியில் முடிந்த பேச்சுவார்த்தை

Must read

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஒரு வாரம் இடம்பெற்ற கடுமையான மோதல்களைத் தொடர்ந்து, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்தை ஏற்று கொண்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் மோதலை குறைக்கும் பேச்சு வார்த்தையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் இருநாடுகளும் போர் நிறுத்தத்தை ஏற்று கொண்டதாக கட்டார் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் “இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஒருங்கிணைப்பதற்கான வழிமுறைகளை நிறுவுவதற்கும்” ஒப்புக்கொண்டதாக கட்டார் வெளியுறவு அமைச்சு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவித்தது.

“போர்நிறுத்தத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், அதன் செயல்பாட்டை நம்பகமான மற்றும் நிலையான முறையில் சரிபார்க்கவும்” எதிர்வரும் நாட்களில் தொடர் கூட்டங்களை நடத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக கட்டார் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு காபூலில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மிக மோசமான மோதலில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு பச்சை கொடி காட்டி இருந்தன.

இதற்கமைய வாக்குறுதியளித்தபடி, பாகிஸ்தான் தரப்புடன் பேச்சுவார்த்தைகள் இன்று தோஹாவில் நடைபெறும்” என்று ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் முன்பு கூறியிருந்தார்,

அத்துடன் ஆப்கன் பாதுகாப்பு அமைச்சர் முல்லா முகமது யாகூப் தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழு கட்டார் தலைநகருக்கு வந்தடைந்ததாக அவர் கூறினார்.

இதேநேரம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு முன்னதாக, நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், ஆப்கானிஸ்தானின் தலிபான் தலைமையின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதாக கூறியது.

மேலும் “ பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் உடனடி நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும்” என்று வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் எல்லை தாண்டிய தாக்குதல்களை தீவிரப்படுத்திய கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியதைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய மோதல் மற்றும் அவர்களின் 2,600 கிமீ (1,600 மைல்) எல்லையில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்கள் தொடங்கப்பட்டன. போராளிகள் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பான புகலிடங்களிலிருந்து செயல்படுவதாகக் பாகிஸ்தான் கூறியது.

இந்த குற்றச்சாட்டுக்களை ஆப்கான் மறுத்து வந்ததோடு நாட்டின் மீது பாகிஸ்தான் அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article