19.5 C
Scarborough

ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருது வென்ற ஆப்கான் வீரர்

Must read

2024ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சியின் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருதினை ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் அஸ்மதுல்லா ஒமர்சாய் வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒமர்சாய், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயற்பட்டார்.

கடந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்களில் ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு அடுத்தபடியாக ஒமர்சாய் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதேபோல, ஆப்கானிஸ்தான் அணிக்காக கடந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பெருமையும் அவரையே சேரும்.

கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய 05 ஒருநாள் தொடர்களில் 04 தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்து, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் சிம்பாவ்வே அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை ஆப்கானிஸ்தான் அணி வென்று அசத்தியது. இந்த நான்கு தொடர்களிலும் அஸ்மதுல்லா ஒமர்சாய் சிறப்பாக செயற்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article