17 வது ஆசியகிண்ண கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டிக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் முன்னேறியுள்ளன.
துபாயில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த போட்டி நடைபெறுகிறது. 41 ஆண்டுகால ஆசிய கிண்ண வரலாற்றில் இவ்வாறு இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கட் வீரரான வசீம் அக்ரம் தெரிவித்துள்ளார் .
இது ஒரு இந்திய- பாகிஸ்தான் போட்டி எனவே நிச்சயமாக இந்தியா தான் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
ஆனால் நீங்கள் பார்த்திருப்பீர்கள் கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள் நானும் பார்த்திருக்கிறேன் இந்த போட்டியில் எதுவும் நடக்கலாம். ஒரு நல்ல பேட்டிங், சிறப்பான பந்துவீச்சு ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும் பாகிஸ்தான் அணி புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும்.
ஆரம்பத்திலேயே ஒரு சில விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் அவ்வாறு வீழ்த்தினால் இந்தியா பின்னடைவை சந்திக்கும் இது ஒரு நெருக்கமான ஆட்டமாக இருக்கும் முடிவில் சிறந்த அணி வெற்றி பெற வேண்டும் என கூறியுள்ளார்.

